ஜெயின் மற்றும் உமர் எழுத்துவடிவ விவாதம்: அழைப்பிதழ்
அன்பான நண்பர் ஜெயின் அவர்களுக்கு,
நீங்கள் பல கட்டுரைகளை இத்தளத்தில் பதிப்பதால், இஸ்லாமைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் நல்ல புலமை படைத்தவர் என்று நினைக்கிறேன்.
எனவே, நாம் இருவரும் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எழுத்துவடிவில் துவக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
நீங்கள் பைபிள் பற்றி எந்த தலைப்பிலும் கேள்விகள் கேட்கலாம். அதாவது ஒரு முறைக்கு ஒரு கேள்வி மட்டும் தான் கேட்கவேண்டும்.
முதலில், நீங்கள் கேட்ட பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விக்கு பதில் தருவேன். பிறகு, நான் உங்களைப் போன்றே குர்ஆன் பற்றி ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம்.
இவ்விதமாக விவாதம் தொடரும். இத்தளத்தின் பல ஆயிர வாசகர்கள், கிறிஸ்தவர்கள் உங்கள் மூலமாக இஸ்லாமை தூய வடிவில் அறிந்துக்கொள்ள வாய்ப்பாக இது இருக்கும்.
உங்கள் விருப்பப்படி எந்த தலைப்பிலும், எப்படி கேட்டாலும் சரி நான் பதில் அளிக்க கடமை பட்டுள்ளேன். அதே போல நானும் கேட்கிறேன்.
உதாரணத்திற்கு ஒரு தலைப்பு:
1. இயேசு தேவ குமாரன் இல்லை என்று பல ஆதாரங்களை முன் வைத்து கேள்வி கேளுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, “முகமது ஒரு தீர்க்கதரிசியா?” என்ற தலைப்பில், ஒரு தீர்க்கதரிசியிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்ன? பைபிள் என்ன சொல்கிறது, இக்குணங்கள் முகமதுவிடம் இருந்ததா? என்று பல ஆதாரங்களை முன்வைத்து கேள்வியை கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.
இப்படி பல தலைப்புக்களில் நாம் விவாதிக்கலாம். இந்த விவாதத்தில் ஒருவரை ஒருவர் நாம் மதித்து நல்ல முறையில் விவாதிப்போம்.
நீங்கள் கேள்விகளை எனக்கு மெயில் மூலமாக அனுப்பினாலும் சரி, அல்லது இத்தளத்தில் பதித்தாலும் சரி, அல்லது நீங்களாக வேறு ஒரு தளத்தில் கேட்டாலும் சரி, நான் உங்களுக்கு அங்கு வந்து பதில் தருவேன், அல்லது மெயில் அனுப்புவேன்.
நீங்கள் ஆங்கிலத்தில் நான் முன்வைத்த என் விவாத அழைப்பை படித்து புரிந்துக்கொள்ளவில்லையென்று, இதை நான் மறுபடியும் தமிழில் உங்களுக்கு புரியும் படி பதிக்கிறேன். உங்கள் விருப்பத்தை இங்கு பதிக்கவும்.