ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்;  http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்…………
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும் ,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் . இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் . இருந்த போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அதிர்ச்சி அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடுஇறைவன் இதை எப்படி சொல்ல முடியும்என்று வாதாடினேன்.”அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்“.என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை. கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல் செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள் தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே நான் மிகவும் போராடினேன்இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?”என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள

முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு

முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ளபெண்களின் மனக்குறைபடுகள்என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள் உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

அன்புள்ள

இதுதான் உண்மை இணையத்தாருக்கு

உங்களின் இணைய கடிதம் கண்டவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

                  http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

மூடப்பழக்கவழக்கங்களை

துடைத்தெரிய வேண்டிய நீங்கள் அதைவிட்டு உண்மையான சமத்துவ சீர்திருத்தத்தை சொன்ன இயேசு கிறிஸ்துவை சாடி இருப்பது உங்களின் பக்குவமின்மையை அருமையாக எடுத்துக்காட்டியது.

1,

உலகில் முதன் முதலில் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.கடவுளுக்கு மனிதர்கள் அடிமைகள்,சடங்காச்சாரங்களே கடவுளை அடையும் வழிமுறைகள் என்று பரவி இருந்த உலகில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,மற்ற மனிதனை நேசிப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதித்தவர் இயேசு.

2,

கடவுள் கோவிலில் குடியிருப்பார் அல்லது ஏதோ ஒரு சிலையில் கடவுள் இருப்பார் என்ரு நம்பிக்கை இருந்த காலத்தில் அவர் எங்கும் நிறைந்தவர்,எல்லா மனிதர்களும் கடவுள் குடியிருக்கும் கோவிலாக மாற முடியும்.ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் சமம் என்பதை உலகுக்கு அறிவித்தார் இயேசு.

3,

விபச்சாரம் செய்த ஆணை தப்ப விட்டு பெண்ணை மட்டும் பிடித்து வந்து அவளை கல் எறிந்து கொல்ல ஆசைப்பட்ட சமுதாயதாயத்தில் பாவமே செய்யதவன் இருந்தால் முதல் கல் எறியட்டும் என்று சொல்லி கடவுள் பெயரில் மனிதனை தண்டிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை இயேசு உலகுக்கு உணர்த்தினார்.

4,

குறிபிட்ட சந்ததி அல்லது ஜாதியில் பிறந்தவன் மட்டுமே கடவுளின் பணி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த காலத்தில் சமுதாயத்தில் எந்த நிலையில் இருப்பவனும் இறை பணியாற்ற முடியும் என்று உலகுக்கு காண்பித்தவர் இயேசு கிறிஸ்து.

5,

உலகின் முதல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியாவ்ர்கள் கிறிஸ்துவின் சீடர்களே என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அது வரலாற்று உண்மை.

6,

ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தான் காரணம்.எனவே அவர்கள் தங்கள் கண்களையும்(முகத்தை என்று விவாதம் செய்பவர்கள் உண்டு),கைகளையும்,கால் பாதங்களையும் தவிர அனைத்தையும் மூடிய நிலையில் வெளியே வரவேண்டும் என்று பெண்ணடிமைத்தனத்திற்கு கட்டளையிட்டவர்கள் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கிறிஸ்துவே.

7,

கடவுள் பெயரில் மனிதனை கொல்லுவது,ஜாதியின் பெயரில் மனிதனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குவது இது போல் செய்யும் மதங்கள் நடுவில் மனிதனை நேசிப்பது எப்படி என்று உலகுக்கு காண்பிப்பது கிறிஸ்துவின் வழியே.

8,

ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் ஏன் என்றால் ஆணுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாது.வேண்டும் என்றால் வேறு நாட்டில் இருந்து பிடித்து வந்த அடிமைகளை அதாவது மற்ற ஆண்களின் மனைவிகளையும் அனுபவித்துக்கொள்ளட்டும் என்று விபச்சாரத்துக்கு வர்ணம் பூசி ஆண்டவன் பெயரில் அறிவித்தவர்களை எல்லாம் உலகின் அழகிய முன் மாதிரிஎன்று வர்ணிக்கப்படுகிற காலத்தில் திருமணம் என்பது இறைவனால் இணைக்கப்படுவது,அதில் எந்த பிரிவினையும் வரக்கூடாது.ஆணோ,பெண்னோ அந்த உறவில் தவறக்கூடாது என்ற அழகிய .முன்மாதிரியை தந்தவர் இயேசு.

தன்னைப்போல்

பிறரை நேசி,ஏழைக்கு இரங்குகிவன் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறான்,அனைத்து மக்களையும் நேசிக்கவேண்டும்,.ஒவ்வொரு மனிதனும் விலை மதிப்பற்றவன்.அவனை திட்டுவதே அவனை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் ,கடவுளின் பெயரில் மற்றவர்களை கொல்லச்சொல்லும் மதங்கள் நடுவில் மற்றவர்களுக்காக உயிர்தியாகம் செய் என்று கற்றுத்தருவது கிறிஸ்துவின் தெய்வீக வழியாகும்.இந்த அற்புதமான கொள்கைகளை தவிர மக்களுக்கு நன்மை உண்டாக்கும் வேறு கொள்கைகளை தந்தை பெரியார் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படி

இருக்க தேவையில்லாமல் இயேசுவை பற்றி தவறாக எழுதி பெரியாரின் உண்மை வழியை மக்களிடன் இருந்து மறைத்துவிடாதீர்கள்.

பிரிவுகள்

என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.இந்த உலகத்தில் பிரிவு இல்லாத ஒன்றை நீங்கள் காட்ட முடியுமா? எந்த மதங்களில் பிரிவு இல்லை,எந்த கட்சியில் பிரிவுகள் இல்லை என்ரு சொல்லுங்கள் .ஏன் உங்கள் பெரியாரியத்தில் பிரிவு இல்லையா?அதை பற்றி விளக்கமாக எழுதவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கடைசியாக

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.பெரியாரை மதிக்கிறோம்,அவர் சொன்ன கருத்துகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.கிறிஸ்தவத்தில் தவறுகள் உண்டு.அதை சாடுங்கள் தவறில்லை.ஆனால் இயேசுகிறிஸ்துவையோ,அல்லது அவரது உபதேசத்தை பற்றியோ பெரியாரியம் என்ற பெயரில் நீங்கள் எழுதும் வாய்சவாடல்களை பொருத்துக்கொள்ள முடியாது.தேவையில்லாமல் எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால் பெரியாரியத்தை பற்றியும் உங்கள் தலைவர் கீ.வீரமணி பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி?

அகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி?

;}

ஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்
1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.

என்னை இரட்சித்த ஒரு தவறு

ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.
நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,

(சுரா 17;90-93 திருப்புமுனை)

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்தரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail:
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com

இஸ்லாம் இனிய மார்கம்

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சிறுபான்மையாக முஸ்லீம்கள் வாழும் நாடுகளில், குரானிலிருந்து முத்துக்களை கண்டுபிடித்து இஸ்லாம் என்பது மடைதிறந்த வெள்ளம் போல கருணை பொங்கும் மதம் என்று காட்ட பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. “மெக்கா வசனங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு சில மென்மையான வரிகளை எடுத்துக்காட்டப்படுகிறது. குரான் முழுக்க இருக்கும் காட்டுமிராண்டித்தனமான வசனங்களையும் மெதீனா வசனங்கள் என்ற பிற்கால வசனங்களில் இருக்கும் சகிப்புத்தன்மை இல்லாத மன்னிக்க முடியாத குரூரமான வசனங்களை மொழுக்கடித்தும் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட வசனங்கள் யாராலும் எடுத்துக்காட்டப்பட்டால், அது பார்க்கவேண்டிய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ‘those verses are out of context’ என்றும், அந்த வரிகள் இவர்களை சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது என்றும் பேசப்படுகிறது. மேற்கிலும் சிறுபான்மையாக வாழும் இடங்களிலும் இவ்வாறு முஸ்லீம்கள் பேசுவது திருடன் போலீஸ் விளையாட்டுதான். முஸ்லீமல்லாதவர்கள் உண்மையான இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும்போது, செத்துஇப்போன மெக்கா இஸ்லாமை அப்பாவி முஸ்லீமல்லாதவர்களிடமும், அரைகுறை முஸ்லீம்களிடமும் பேசி குரானின் பெருமைகளை பேசுவார்கள். இந்த வசனங்கள் நீக்கப்பட்ட வசனங்கள் என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். மெக்கா வசனங்களை நஸ்க் (நீக்கம்) செய்து உருவாக்கிய மெதீனா இஸ்லாமின் முகத்தை கவனத்துடன் மறைப்பார்கள். இஸ்லாமிஸ்டுகளின் போர்த்தந்திரம் மிகவும் தெளிவானது.
* சிறுபான்மையாக வாழும்போதும், அல்லது வலிமை இல்லாமல் இருக்கும்போதும் மெக்கா இஸ்லாமை பின்பற்றுவது
* இஸ்லாமிய சொர்க்கங்களை நிர்மாணம் செய்தபின்னாலோ, அல்லது முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆனபின்னாலோம், மெதீனா இஸ்லாம் அல்லது உண்மையான இஸ்லாமை பின்பற்றுவது.
இஸ்லாமின் இந்த இரண்டு முகங்களை எவ்வளவு சீக்கிரம் மனித குலம் கண்டுகொள்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரமுடியும்.
உயிருள்ள உண்மையான மெதீனா இஸ்லாமை பற்றி நமக்கு என்ன தெரியும்? இதோ பதில்.
உண்மையான இஸ்லாமைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குரானை காலவரிசைப்படி படிக்க வேண்டும். அது பிரசுரம் ஆகியிருக்கும் வரிசைப்படி படிக்காமல், எந்த வரிகள் எப்போது வந்தன என்ற காலவரிசைப்படி படிக்கும்போது நமக்கு தூக்கிவாரிப்போடும். இவ்வாறு காலவரிசைப்படி படிக்கும்போது எந்த வரிகள் காலத்தால் முந்தையவை, எந்த வரிகள் காலத்தால் பிந்தையவை, காலத்தால் முந்தைய எந்த குரான் வரிகளை, காலத்தால் பிந்திய குரான் வரிகள் நீக்கம் (நஸ்க்) செய்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். எந்த வரி எப்போது சொல்லப்பட்டது என்று தெரிந்துகொள்ளாமல் குரானை புரிந்துகொள்ள முயற்சிப்பது வீண். ஏனெனில், குரானின் பல வரிகள் மற்ற வரிகளால் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன.
குரானே இந்த முறையை கீழ்க்கண்ட வரிகளில் பேசுகிறது.
God does not abrogate any verse but substitutes something similar or better…2:106“நமது வசனங்களிலே சிலவற்றை நீக்குகிறோம், சிலவற்றை மறக்கும்படி செய்கிறோம். அதன் இடத்திலே, அதே போன்றதாகவோ அதனைவிட சிறப்பானதாகவோ கொண்டுவருகிறோம்” (2:106)
God removes (abrogates?) what He wills…13:3913:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
God substitutes one revelation with another; God has the mother of the Book…16:10116:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
மேற்கண்ட வரிகள் பலரிடம் பல குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அல்லா தன் மனத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வார். அந்த மாற்றத்தின் விளைவு பயங்கரமானது. இப்படிப்பட்ட மாற்றங்களின் விளைவு பல சமயங்களில் வாழ்வுக்கும் சாவுக்குமான வித்தியாசத்தை கொண்டுவருகின்றது. ஆகவே, எந்த வரிகள் யாருக்கு பொருந்தும் என்றும் எந்த வரிகள் பொருந்தாது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியமாக அப்பாவி முஸ்லீமல்லாதவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வரிகளில் முஇக்கியமானது முஸ்லீமல்லாதவர்களுடன் ஜிகாத் போர் புரிவது பற்றிய வரிகள். எப்போது ஜிகாத் போர்புரிவது தடுக்கப்பட்டது என்பதும் எப்போது ஜிகாத் போர் புரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
மெக்காவில் சொல்லப்பட்ட வரிகள் வன்முறையற்ற வரிகள். 87 மெக்கா வரிகளும் 27 மெதீனா வரிகளும் இருக்கின்றன. ஆக மொத்தம் 114 சுராக்கள் குரானில் இருக்கின்றன.
மெதீனா வரிகள் போர் புரிவதை குறித்த வசனங்கள். ஏனெனில் மெதீனாவில்தான் அல்லாவிடமிருந்து முஸ்லீமல்லாதவர்களோடு போர் புரிய முகம்மதுவுக்கு ஆணை வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே 87க்குப் பிறகு இருக்கும் வசனங்கள் 87க்கு முந்தைய வசனங்களை மாற்றி எழுதப்பட்டவை என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த சிறிய கட்டுரையில் எப்படி இந்த குழப்பத்தை நீக்குவது என்று விளக்க முயல்கிறேன்.
ஒவ்வொரு வரிக்கு பின்னாலும் இருக்கும் எண் அதன் காலவரிசை எண்()
இஸ்லாமை முகம்மது பரப்பியதை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.இவை
1. அமைதியான முறையில் பரப்புவது
2. தற்காப்புக்காக போரிடுவது
3. கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்
4. கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு
தொடரும், வாழ்க இஸ்லாம்,வளர்க அமைதி மார்கம் நன்றி