ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

TORTURED14.jpg picture by unmaiadiyaan
ஈரனிலுள்ள

கிறிஸ்தவ விசுவாசிகள் உறுதியான நம்பிக்கையும்,வல்லமையான சாட்சிகளாகவும் இருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியும் இன்றைக்குக் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிற பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியரைத் தொடக்கூடியதாக இருக்கின்றது. சமீபத்தில்

அவர்களில் 11 பேருக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் சிலாக்கியத்தைத் தேவன் எனக்கு தந்தார். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மற்றும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட இடத்தை நாங்கள் குறிப்பிடவில்லை. எண்ணிக்கையின் படி இராசியக் கிறிஸ்தவர்கள் அல்லாமல் ஐரோப்பாவில் 60 ஆயிரம் ஈரானியக் கிறிஸ்தவர்களும்,அமேரிக்காவில் 77 ஆயிரம் பேரும் உள்ளனர்.அமேரிக்காவில் மட்டும் இரகசியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் முதல் 3 லட்சமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவர்கள் அனைவரும் தங்களது விசுவாசத்தில் உறுதியாக நின்று தங்களுக்கு நேரிடுகிற உபத்திரவங்களைத் தைரியமாக சந்திக்கும்படி தயவு செய்து இவர்களை உங்களது ஜெபத்தில் தாங்குங்கள் . ஈரானில்

1979ல் புரட்சி நடந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு இஸ்லாமியர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளான ஈரான்,சவுதி அரேபியா ,ஏமன்,பூட்டான்,நேப்பாளம் ,மியான்மார்,திபெத்,வங்காள தேசம் ,அப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் ஊழியம் செய்து வருகிறோம் .சுவிசேம் சந்திக்கப்படாத மக்களை படக்கதை,இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் கொடுத்து மக்களை சந்தித்து வருகிறோம்.தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள் . SOURCE;TORTURED FOR CHRIST-FEB-2007

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 ,இஸ்லாமிய தளங்களுக்கு பதில்

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 ,இஸ்லாமிய தளங்களுக்கு பதில்

இயேசுவின் பிறப்பு விவரங்கள் – பைபிளிலும் மற்றும் குர்-ஆனிலும்(ஒரு மறுப்புக் கட்டுரை)தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.

இவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம். தேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.

அவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் : இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? – தொடர் – 1 (http://www.tamilmuslim.com/ )
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ரங்கிப்பேட்டை ஜி – நிஜாமுத்தீன்

தொடர் – 1
அறிமுகம்.

உலக அளவில் 200 கோடி மக்களால் – அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.

என் மறுப்பு:

மிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.

இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் இயேசுவை இரச்சகர் – கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.

என் மறுப்பு:

குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை “ஆரோனின் சகோதரியே” என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த “ஆமான்” என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.

சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.

குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். Inheritance in Koran Koran Contradictions

இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். ( ai url )

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று – இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

என் மறுப்பு:

குர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக “கள்ள தீர்க்கதரிசிகள்” வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.

குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.

இப்படிப்பட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

சமூகமும் – இயேசுவின் பிறப்பும்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 – 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

என் மறுப்பு:

சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.

a) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3

ஆதியாகமம் 16:1-3

16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.

16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

b) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறாள்: ஆதியாகமம்: 16:4-5

ஆதியாகமம் 16:4-5

16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்

16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

c) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6

ஆதியாகமம் 16:6

16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்

d) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8

ஆகாரும் தன்னை “ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை” தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.

கர்த்தருடைய தூதனானவர் கூட “ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்” சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.

ஆதியாகமம் 16:7-8

16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,

16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

e) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12

முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு “துஷ்டமனுஷனாக இருப்பான்” என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.

ஆதியாகமம் 16:9-12

16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.

16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

f) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம் 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள் .

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

என் மறுப்பு:

அருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே! மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.

இறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா?

அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.

ஆதியாகமம்: 21:12-21

21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்

ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.

1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.

Tabari VI:52 “The Ka’aba had not had any custodians since its destruction in the time of
Noah. Then Allah commanded Abraham to settle his son by the Ka’aba, wishing thereby to
show a mark of esteem to one whom he later ennobled by means of his Prophet Muhammad.”
“Abraham and his son Ishmael were custodians of the Ka’aba after the time of Noah. At the time, Mecca was uninhabited….”

இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை. (ஷகீனா வழிகாட்டியதாக வரும் செய்தி)

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

என் மறுப்பு:

அருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா? அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார்? அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை ?

a) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம்: 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

b) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு – குர்-ஆன் சாட்சி :

குர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை. இஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்? யாருடைய பெயரையாவது சொல்லமுடியுமா?

c) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26

குர்-ஆன் 6:89, 11:28, 29:27, 57:26

6:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.

11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) ‘என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.

29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.

57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் – இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.

ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.

அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

‘(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ”எனக்கு நீர் கீழ்படியும்” என்று கூறியதும் ”அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)

இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.

(இஸ்ரவேலாகிய) யஃகூபும் ” என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்” என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?”

மக்கள் பதில் சொல்கிறார்கள் ”நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்” (அல் குர்ஆன் 2:133)

என் மறுப்பு:

ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து ” நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்” என்றுச் சொன்னதில்லை.
இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.

என் மறுப்பு:

பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.

குர்-ஆன் 19:33

“இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. — இயேசு.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.

”நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.” (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ”பொய்பிக்கப்பட்டார்கள்” அல்லது ”கொலை செய்யப்பட்டார்கள்” என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. ‘உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..’ என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக – அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

என் மறுப்பு:

நல்லது, தொடருங்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை – செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா… யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

என் மறுப்பு:

ஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும்.

தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்? இங்கு படிக்கவும்.
The Death of `Asma’ Bint Marwan
“ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ” — இதனை நான் ஆமோதிக்கிறேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் – வரும் தலைமுறைக்கு – நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.

இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி – அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் – நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,

‘இயல்பாக’ சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் ‘பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்’ என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

என் மறுப்பு:

பிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.

வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.


Dr.ஜாகிர் நாயகின் முகமூடிகள் சமீப காலமாக கிழிந்து வருகிறது.இருந்தாலும் அவர் பொய்,பித்தலாட்டங்களை அறிவுப்பூர்வமாக அரங்கேற்றி வருகிறார்.

அவரின் வருகை குறித்து உமர் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை


http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8400#8400

வருகின்ற 11 (நாளை) முதல் 20 தேதி வரை Dr.ஜாகிர் நாயகின் பீஸ் முகாம் சென்னையில் நடக்க உள்ளது.

எதற்காக ஜெபிக்கவேண்டும் என்ற விவரங்களுக்கு இந்த குறிப்புக்கள் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1. இஸ்லாமியர்கள் “அமைதி(Peace) கூட்டம்” என்ற போர்வையில் பல கூட்டங்களை நடத்தி மக்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.

2. இப்படிப்பட்ட கூட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டு, பைபிள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் தவறான கருத்துக்களைச் சொல்லி, கிறிஸ்தவர்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்வோம்.

3. இதில் பேசப்போகும் ஜாகிர் நாயக் மட்டுமல்ல, மற்ற எல்லா அறிஞர்களும், ஜிஹாத், மற்றும் இஸ்லாமிலிருந்து வெளிவருபவனை கொலை செய்யவேண்டும் என்ற ஷரியா சட்டம் சரியானது தான் என்று வாதாடுபவர்கள், மற்றும் அதை பிரச்சாரம் செய்பவர்கள். இவர்கள் “அமைதி” என்று பேசினால், அது எப்படி உண்மையாக இருக்கமுடியும். இதை எல்லா மக்களும் அறிந்துக்கொள்ள ஜெபிக்கவேண்டும்.

4. அமைதி கூட்டம் என்று சொல்லி, இங்கு மிகவும் ஆர்வமாக பேசும் இஸ்லாமிய அறிஞர்கள், முதலாவது இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்கச் சொல்லுங்கள். இஸ்லாமியர்களின் வார்த்தைகளில் மக்கள் மயங்கி உண்மையை விட்டு விலகாமல் இருக்க ஜெபிப்போம்.

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷம் போடுவான் என்று வேதம் சொல்வதை எல்லா கிறிஸ்தவர்களும் உணரவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.

யாராவது இக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள விரும்பினால், முதலாவது நம் தளங்களில் எழுதப்பட்டுவரும் கட்டுரைகளை, குறைந்தது நாம் இஸ்லாம் அறிஞர்களுக்கு அளித்துக்கொண்டு வரும் பதில் கட்டுரைகளையாவது படித்துவிட்டு செல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை உண்மை என்று நம்பாதீர்கள். அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 கட்டுரைகளையும், பதில்களையும் நாம் சேர்ந்து அவர்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் மட்டும் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். பதில் சொல்லமாட்டார்கள், ஆனால், பைபிள் பற்றி, கிறிஸ்து பற்றி பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனவே, மற்றவர்களுக்காக ஜெபிப்பது மட்டுமல்ல, எச்சரிக்கை செய்வதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை என்று சொல்லிக்கொள்கிறேன்.

இக்கூட்டங்களில் பங்கு பெருபவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றிய ஏதாவது புத்தகங்கள் கிடைக்குமானால் கொண்டு வாருங்கள். அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இங்கு பதிவு செய்யுங்கள். யூத இராஜ சிங்கமாம் இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாகும் படி அதற்கு பதில் தர முயற்சி செய்வோம்.

கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் பயந்துப்போய் மௌனமாய் இருக்கமாட்டார்கள் என்பதை “இவ்வுலகத்தின் அதிபதி” அறியட்டும்

இஸ்லாம்:இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இஸ்லாம்;முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/akbar.shtml
இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன்,என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் .எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும்.இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் . என்னுடைய

சாட்சி என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன்.எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள்,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள்.இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும்,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார் என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

.”

முஸ்தபா “,முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர்“. அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் .ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார். ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னதுஇந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்“.தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார்.அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது .இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை.ஒரு நபியாகவே நம்புகிறோம்.

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள்,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள்.

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் ” blood hemorrhage என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள். அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்.என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள்.”நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது.அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்.”நீ யார்‘” என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,”இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான், இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்“” உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன்.என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை. நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை?முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல் திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன்.17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்.”என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன ,என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர்.”அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ?கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.”என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது.இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும், உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது.சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன்.

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன்.அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம்.இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும்,தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார்.ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது.மருத்துவரிடம் சென்றோம்.”இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாதுஎன்று கூறிவிட்டார்.என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும்,அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார்,”அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்“.நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்.”இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது.விசுவாசத்தோடு தடவுங்கள்என்று சொன்னோம்.

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார்.இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது .இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.ஞானஸ்தானமும் பெற்றார் . சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் . எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர்.தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் .அவருக்காக பாடுபட்டதும்,இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார்.நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ; இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும்.இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும்,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும்,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

பி.ஜைனூல் ஆபிதின் எழுதிய புத்தகத்துக்கு ஈசாகுரான் உமர் மீண்டும் பதில்.

பிரபல இஸ்லாமிய அறிஞரும்,தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் தலைவருமான பி.ஜைனூல் ஆபிதின் எழுதிய புத்தகத்துக்கு ஈசாகுரான் உமர் மீண்டும் பதில்.

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்

(பிஜே அவர்களின் “இயேசு இறைமகனா?” புத்தகத்திற்கு மறுப்பு)பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் “இயேசு இறைமகனா ?” என்ற புத்தகத்தில் நான்காவது பகுதியில், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா ஆள் மாறாட்டம் செய்து இயேசுவை எடுத்துக்கொண்டார் என்று எழுதுகிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று பைபிள் சொல்வதும், கிறிஸ்தவர்கள் நம்புவதும் தவறானதாகும், குர்‍ஆன் சொல்வது தான் சரியானது என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக குர்‍ஆன் 4:155 – 159 வசனங்களை ஆதாரமாக காட்டுகிறார்.

பிஜே அவர்கள் புத்தகத்திலிருந்து:இயேசுவைப் பற்றி

அவரை (இயேசுவை) அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் (கர்த்தர்) தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (கர்த்தர்) மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)

Source: http://www.onlinepj.com/book/mahana19.htm

குர்‍ஆன் சொல்லும் இந்நிகழ்ச்சியில் அனேக பிரச்சனைகள் உள்ளது. மட்டுமல்ல, இது குர்‍ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லா மாற்றி சொல்வதினால், அல்லா எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்.

பிஜே அவர்களின் இந்த வசனங்களுக்கு பதிலாக கீழ் கண்ட கட்டுரையை முன்வைக்கிறேன் .“ஏமாற்றும் இறைவன் திறமையில்லா மஸீஹா”

ஆங்கிலத்தில் படிக்க: (Deceptive God inCompetent Messiah – Allah Starts Christianity …. by Accident)

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு நான் மெயில் அனுப்பி, அனுமதி பெற்று, அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

பி.ஜே அவர்களுக்கு இக்கட்டுரையை நான் பதிலாக முன் வைப்பதால், இக்கட்டுரை சம்மந்தப்பட்ட பிஜே அவர்களது எல்லா கேள்விகளுக்கும் முடிந்த அளவிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர பதில்கள் :1. பிஜே அவர்களும் திரித்துவமும்,பவுலும் .

முஸ்லீம்களுக்கு வேண்டுகோள் : என் அருமை தமிழ் முஸ்லீம்களே, நான் ஒரு பதில் எழுதினால், அது யாருக்காக எழுதப்படுமோ அவர்கள் தான் பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. குர்‍ஆனை நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் பதில் அளிக்கலாம், முடிந்தால்.

கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் : என் அருமை கிறிஸ்தவர்களே, பிஜே அவர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், உங்களில் பலரும் அதில் பங்கு பெற்று கேள்விகள் கேட்டு இருப்பீர்கள். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், இக்கட்டுரையை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்புங்கள் . ஈஸா குர்‍ஆன் தளத்தையும், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் பிஜே அவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர் பதில் அளிந்து இருப்பாரானால், அதை (கேள்வியும், பிஜே அவர்கள் அளித்த பதிலும்) எனக்கு இந்த மெயில் விலாசத்திற்கு ( isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com ) அனுப்புங்கள். நான் என் கருத்தை அல்லது பதிலை எழுத முயற்சி செய்வேன். இது கிறிஸ்தவர்கள் இஸ்லாமை இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஈஸா குர்‍ஆனின் இதர இஸ்லாம் கட்டுரைகளையும், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தள கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த பதில்களை(மறுப்புக்களை)யும் படிக்கவேண்டுமானால், கீழ் கண்ட தொடுப்புகளை க்ளிக் செய்யவும்.

1. http://www.geocities.com/isa_koran
2. http://www.tamilchristians.com/
3. http://isakoran.blogspot.com/

இயேசு இறைமகனா?தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1

இயேசு இறைமகனா?பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் என்பவர் இயேசு இறைமகனா என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.இந்த புத்தகத்திற்கு ஈசாகுரான் இணையம் உமர் அவர்கள் பதில் அளிக்க உள்ளார்.அதன் முதல் கட்டுரையாக இந்த பதில் வெளியிடப்பட்டுள்ளது.உண்மையை கூடிய சீக்கிரம் தமிழ் உலகம் அறியப்போகிறது.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjTrinityPaul.htm பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்)

முன்னுரை:தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள், இயேசு இறைமகனா?” என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் ” அப்போஸ்தலர் பவுலைப் பற்றி கீழ் கண்டவாறு ” எழுதுகிறார்.

“பவுல் வாக்கு மூலம்இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே .

கர்த்தருக்கு சித்தமானால், “இயேசு இறைமகனா” என்ற புத்தகத்தில் பி.ஜே அவர்களது எல்லா கிறிஸ்தவ சம்மந்தப்பட்ட கருத்துக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்வேன். முதலாவதாக, பவுல் பற்றி பி.ஜே அவர்கள் சொல்லும் கருத்துக்கு என் பதிலை இக்கட்டுரையில் தருகிறேன்.

பி.ஜே அவர்கள் பவுல் மீது வைக்கும் குற்றச்சாட்டு :

இயேசுவிற்கு பிறகு, முக்கடவுள் (Trinity – திரித்துவ) கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தவர்
திரித்துவ கொள்கையை உருவாக்கியது” பவுல் என்ற முஸ்லீம்களின் வாதம், தவறானது மற்றும் ஆதாரமற்றது .

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. அடிப்படை கோட்பாடுகளிலேயே இவ்விரண்டும் வேறுபடுகின்றன.

ஆனால், இஸ்லாமியர்கள் கீழ் கண்ட கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்:

1. இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி மட்டுமே.2. இயேசுவின் போதனைக்கும் முகமதுவின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள்.

3. அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்தவத்தை கெடுக்க‌ இயேசு சொல்லாத‌, பைபிளில் இல்லாத “திரித்துவ கொள்கையை” உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார்.

இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல என்பதை கீழ் கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி

திரித்துவ கொள்கை பைபிளின் உயிராகும், அது பவுலின் கற்பனை அல்ல‌இக்கட்டுரையில் “திரித்துவ கொள்கை” என்றால் என்ன என்று நாம் பார்க்கப்போவதில்லை. புதிய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது, இயேசு என்ன சொன்னார், இயேசுவின் சீடர்கள் என்ன சொல்கிறார்கள், கடைசியாக பவுல் என்ன சொல்கிறார் என்று பார்க்கப்போகிறோம். பவுல் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையானாலும், இயேசுவும், அவர் சீடர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், பி.ஜே அவர்கள்(இஸ்லாமும்) பவுலின் மீது சாற்றும் குற்றம் ஆதாரமற்றது என்பது விளங்கும் .

[பழைய ஏற்பாட்டில் திரித்துவம்: பழைய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தனி கட்டுரையில் காணலாம். இப்போதைக்கு, பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகள் உதவும்.

An Explanation of the Trinity for Muslims

THE TRINITY - From Biblical Reason and from the Old Testament

Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims

The Trinity – More than 50 Articles]

புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, இயேசுவும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.1. புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்:

புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரித்தஆவியானவர் என்று பல வசனங்கள் வருவதை பார்க்கலாம். இயேசுவும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார், இயேசுவின் சீடர்களும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக பவுல் இதைப் பற்றி எழுதுகிறார்.

ஆனால், முஸ்லீம்கள், இயேசு சொல்வதையும், பவுல் அல்லாத மற்ற சீடர்கள் சொல்வதையும் காற்றிலே விட்டுவிட்டு, பவுல் தான் இக்கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார் என்று தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

1.1 நற்செய்தி நூல்களில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் விவரங்கள்:

முஸ்லீம்களின் கருத்து தவறான கருத்தாகும். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது அப்போஸ்தலன் பவுல் அல்ல, அதை எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.

மூன்று நற்செய்தி நூல்களில் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே இடத்தில் இடைபடும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையிலிருந்து ஏறிவரும் போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மீது இறங்குகிறார், மற்றும் வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன்” என்றுச் சொல்லும் சத்தம் வானத்திலிருந்து வருகிறது.

இந்நிகழ்ச்சி மத்தேயு (3:16-17), மாற்கு(1:10-11) மற்றும் லூக்கா(3:21-22) என்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பவுல் எழுதவில்லை என்பதை முஸ்லீம்கள் நம்பவேண்டும். வேண்டுமானால், முஸ்லீம்களின் வழக்கமான பதிலாக சொல்லப்படும் ” ஆரம்ப காலத்தில் இந்நிகழ்ச்சி நற்செய்தி நூல்களில் இல்லை, பின்னாட்களில் இந்நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சேர்த்து எழுதினார்கள்” என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் , இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

1.2 இயேசுவின் வார்த்தைகளில் திரித்துவம் :இயேசு பல முறை பிதா என்றும், பரிசுத்த ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்.

யோவான்: 14:8. பிலிப்பு அவரை நோக்கி, ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப்போதும் என்றான்.9. அதற்கு இயேசு, பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னைஅறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவைஎங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?யோவான்: 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இயேசு சென்ற பிறகு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்புவதாகவும் சொல்லியுள்ளார். கீழ் கண்ட வசனத்தில் இயேசு, பிதாவைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும் குறிப்பிடுவதை காணலாம்.

யோவான்: 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார் .

இது போல பல சந்தர்பங்களில் இயேசு பிதா என்றும், ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்தால், தெரிந்துக்கொள்ளலாம்.[ ஒன்றுக்குள் ஒன்று(யோவான் 10:30) என்றால் கடவுள் எனப் பொருளா? என்ற பி.ஜே அவர்களின் கருத்திற்கு தனி கட்டுரையில் பதில் அளிக்கிறேன்]

1.3 இயேசுவின் கட்டளை: பிதா, குமாரன், ஆவியானவரின் பெயரில் ஞானஸ்நானம் இயேசு தன் சீடர்களுக்கு கடைசியாக கொடுத்த கட்டளையில் மிகவும் அழகாக திரித்துவத்தின் மூன்று நபர்களை குறிப்பிடுகிறார். அதுவும், முஸ்லீம்கள் நம்புவது போல, குமாரனாகிய இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான் என்ற வாதம் ஆட்டம் காணும் அளவிற்கு குமாரன், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பேசுகிறார்.

மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார், ஆமென்.

இந்த கட்டளையை தங்கள் இதயங்கள் சுமந்தவாறு இயேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்குச் சென்று, இயேசுவின் மூலம் வரும் இரட்சிப்பை சொல்லி, எல்லா நாட்டு மக்களையும் சீடராக்கினார்கள்.எனவே, இன்று நான் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களை அழைக்கிறேன், இயேசுவின் அன்பின் செய்தியை உங்கள் இதயத்தில் ஏற்று, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்று, திருமண உறவுகள், உடலுறவுகள் இல்லாத, மதுபானம் இல்லாத பரலோகத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

பவுல் எழுத்துக்களுக்கு முன்பாகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இக்கட்டளையை தம் சீடர்களுக்கு கொடுத்து சென்றுள்ளார் என்பதை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

1.4 இயேசுவின் சீடன் போதுருவின் வார்த்தைகளில் திரித்துவம்:இயேசுவோடு கூட இருந்தவர், இயேசுவின் பல முக்கிய அற்புதங்களில் அவரோடு கூடவே இருந்தவர் இந்த சீடர் பேதுரு. தனக்கு பிறகு தன் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இவரை நம்பி இவரிடம் கொடுத்தார், இவருக்கு தலைமை பொறுப்பு அதிகாரம் கொடுத்தார். இயேசுவை எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தாலும், இவரை இயேசு மறுபடியும் தன்னிடம் சேர்த்துக்கொண்டு, எருசலேமின் ஆரம்ப கால சபைக்கு தலைவராக இருக்கும்படி இவரை உட்சாகப்படுத்தினார்.

ஆரம்ப கால சபை விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு பற்பல பாஷைகளை பேசும் போது, மக்களுக்கு ஒரு அருமையான பிரசங்கம் செய்து, 3000 பேரை தன் மந்தையில் சேர்த்தவர் இவரே. அவர் செய்த முதல் பிரசங்கத்திலேயே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாக காட்டி மக்களை நல்வழிப்படுத்தினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார் .

இவர் எழுதிய ஒரு கடிதத்தில் “திரித்துவத்தைப் பற்றி” சொல்வதை கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.

1 பேதுரு: 1: 2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே , கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது, கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது .

மேலே உள்ள வசனத்தில் மூன்று வேலைகளைப்(நபர்களைப்) பற்றி சொல்கிறார், பிதா, இயேசு, பரிசுத்த ஆவியானவர்.

1. பிதாவின் முன்னறிவிப்பு2. ஆவியானவரின் பரிசுத்த மாக்குதல்

3. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதல்.

எனவே, பி.ஜே அவர்களும் மற்ற இஸ்லாமியர்களும் சொல்வது போல, திரித்துவ கொள்கையின் நாயகன் பவுல் அல்ல என்பது இப்போது விளங்கும்.1.5 இயேசுவிற்கு பிரியமான சீடன் யோவான் வார்த்தைகளில் திரித்துவம் :

இயேசுவிற்கு பிரியமான‌ சீடன் யோவான் ஆவார். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்து இளைப்பாரும் அளவிற்கு இயேசு இவர் மீது அன்பாக இருந்தார். இவர் தான் புதிய ஏற்பாட்டில் நான்காவது நற்செய்தி நூலாகிய “யோவான் நற்செய்தி” நூலை எழுதியவர், மற்றும் புதிய ஏற்பாட்டில் கடைசி புத்தகமாகிய “வெளிப்படுத்தின விசேஷம்” எழுத இயேசு இவருக்கு தரிசனத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விவரங்களை வெளிப்படுத்தினார். இவர் சபைகளுக்கு மூன்று தனி கடிதங்களையும் எழுதியுள்ளார்.

இவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.

1 யோவான்: 5: 7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

இவ்வசனத்தில் வார்த்தை என்பது இயேசுவை குறிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.இவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனத்தில் கூட பல முறை ” ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை, காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று பல முறை எழுதுகிறார்.

வெளி 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. (இதே போல இந்த வசங்களிலும், 2:7, 2:11, 2:17, 3:6, 3:13, 3:22)

மற்றும் சிங்காசனத்தில் தேவன் உட்கார்ந்துள்ளார், வலது பாரிசத்தில் ஆட்டுக்குட்டியானவர் இயேசுவும் உட்கார்ந்துள்ளார் என்று பல வசனங்கள் வருகின்றன.

வெளி 5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.வெளி 5:13 அப்பொழுது, வானத்திலும் பூயிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

வெளி 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு .

இப்படி வசனங்களை சொல்லிக்கொண்டுப் போகலாம்.1.6 கடைசியாக பவுலின் வார்த்தைகளில் திரித்துவம் :

இவைகள் பவுலின் வார்த்தைகள்.

2 கொரிந்தியர்: 13:14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக .

1.7 சில கேள்விகள்:நாம் இதுவரைக்கும் பவுலுக்கு முன்பாகவும், பவுல் அல்லாத மற்ற சீடர்களும், இயேசுக் கிறிஸ்துவும் திரித்துவ கொள்கையைப்பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை கண்டோம். திரித்துவம் என்றால் என்ன? பைபிளில் எங்கெங்கே இதைப் பற்றி விவரங்கள் கிடக்கின்றன என்று நாம் பார்க்கவில்லை. அதைப் பற்றி தனி கட்டுரைகளில் பார்க்கலாம்.

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்வது போல, பவுல் திரித்துவ கொள்கையை உருவாக்கவில்லை, அதை பயன்படுத்தி கிறிஸ்தவத்திற்குள் நுழையவும் இல்லை. இது இஸ்லாமியர்களின் கற்பனையே ஒழிய வேறில்லை.

இஸ்லாமியர்களின் இக்கூற்று ஆதாரமற்றது என்பதை தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் அல்லது விவரங்கள்:

1. பவுல் கிறிஸ்தவத்திற்கு வருவதற்கு முன்பே, எருசலேமில் பல ஆயிரபேர் பேதுருவின் பிரசங்கங்களினால் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேதுருவினாலும், யோவானாலும் மற்ற சீடர்களாலும் பல அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரிலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பவுல் இயேசுவின் சீடர்களோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. விசுவாசிகள் அதிகமாகிறதினால், அனேகர் கைது செய்யப்பட்டு (தேவதூஷணம் குற்றத்திற்காக, இயேசு தேவகுமாரன் என்று சொன்னதற்காக)ஸ்தேவான் என்பவர் கல்லெரியப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமயத்தில் கல்லெரிபவர்களின் கூட்டத்தில் இருந்தவர், இந்த பவுலே.

3. இயேசு தேவ குமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் அல்லது நல்லவர், அவர் மரிக்கவில்லை மறுபடியும் எழுந்திருக்கவில்லை என்று பேதுருவும், மற்ற சீடர்களும் சொல்லியிருப்பார்களானால், ஏன் யூத ஆசாரியர்களும், பவுலும் இவர்கள் மீது “தேவதூஷணம்” குற்றம் சுமத்தி, கொல்ல முயற்சி செய்வார்கள்? முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டும். ஒரு பொய்யைச் சொல்லி ஏன் இயேசுவின் சீடர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தை வருவித்துக்கொள்ளப்போகிறார்கள்.

4. இயேசு பரமேறிச் சென்ற 40வது நாளிலேயே 3000 பேர், பேதுருவின் பிரசங்கம் கேட்டு சபையில் விசுவாசிகள் ஆனார்கள். இந்த 3000 பேருக்கு “பேதுரு” என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறீர்கள் நீங்கள்?

5. இயேசு தேவன் கிடையாது, அவர் மரிக்கவில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா தான் இறைவன் என்று சொல்லியிருப்பார்களா சீடர்கள்?

6. இப்படி சொல்லியிருந்தால், இவர்கள் ஏன் கொல்லப்படுவார்கள், ஏன் உலகமெல்லாம் சுற்றி நற்செய்தியை சொல்லி கஷ்டப்பட்டிருப்பார்கள்?

7. இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் போது, திடீரென்று பவுல் வந்து “தேவன், இயேசு, பரிசுத்த ஆவியானவர்” இவர்கள் மூவரும் ஒரே இறைவன் தான் என்று சொல்லியிருந்தால், இத்தனை ஆயிரம் பேர் ஏற்றுக்கொள்வார்களா?

8. ஒருவரை இருவரை ஏமாற்றலாம், அல்லது சிலரை ஏமாற்றலாம், இத்தனை ஆயிரம் பேரையா திடீரென்று ஏமாற்ற முடியும்? தங்கள் கொள்கைகளை விட்டு புது கொள்கைக்கு மாற்ற முடியும்?

இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை .

முடிவுரை:கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகள் அல்லது அஸ்திபாரம் போடுவதில், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், மற்றும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய 6 புத்தகங்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றன. மற்றபடி பவுல் எழுதிய இதர கடிதங்கள் இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்ட மாளிகைகளே தவிர வேறில்லை.

ஒரு உதாரணம்:

இயேசு போட்டது அஸ்திபாரம்: …. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்(மத்தேயு 19:19).

பவுல் கடிதங்களில் எழுதியது, இயேசு போட்ட அஸ்திபாரத்தின் மீது எழுப்பிய மாளிகை: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்(ரோமர் 13:8).

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது(1 கொரிந்தியர் 13:4).

இது ஒரு உதாரணம் தான், இயேசு சொன்னதற்கு முரணாக ஒரு கருத்தையும் நாம் பவுலுடைய எழுத்துக்களில் காணமுடியாது. ஏனென்றால், பவுல் ஒரு எழுத்தாணி மட்டும் தான், எழுதியது ஆவியானவர். எனவே, தான் எந்த முரண்பாடும் காணமுடியாது.

இயேசுவின் பிறப்பு, அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை இவை அனைத்தையும் விளங்கிக்கொள்ள, அல்லது இவைகள் பற்றி தெரிந்துக்கொள்ள நாம் தேடவேண்டியது, பவுல் எழுதிய கடிதங்களில் அல்ல, அதற்கு மாறாக நான் மேலே சொன்ன 6 புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலேயே. இந்த 6 புத்தகங்கள், கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் போடுமானால், பவுலும், மற்றவர்களும் எழுதிய கடிதங்கள், சபை, விசுவாசிகள் சந்திக்கும் அன்றாட‌ பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தேவையான பதிலைச் சொல்கின்றன. எனவே, புதிய ஏற்பாட்டின் இந்த இரண்டு வகையான புத்தகங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள், இவைகளில் முரண்பாட்டை கண்டுபிடிக்க யாராலும் முடியாது.

பவுலை காரணம் கட்டி, கிறிஸ்தவர்களை வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு திசை திருப்ப யாராலும் முடியாது.

கிறிஸ்தவர்களுக்கு சில வேத எச்சரிக்கைகள் :

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்( பேதுரு 1:16 ).

இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13 )

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,( 1 தீமோத்தேயு 1:3 )

சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு(1 தீமோத்தேயு 4:7 ).

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjTrinityPaul.htm

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி?


இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? – நகைச்சுவை

சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.

HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed

அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:

நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.

1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, “ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது” அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்”.

2. “இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது” என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் “இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது “இஸ்லாமில் கட்டாயமில்லை” என்று பதில் சொல்லுங்கள்.

3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள் .

4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய “குர்-ஆன் மொழிபெயர்ப்பு” தவறானது என்றுச் சொல்லுங்கள்.

5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.

7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.

8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.

9. இதற்கு அவர், “குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய “குர்-ஆனில் அறிவியல்” என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.

10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.

11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.

13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள் .

14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் “நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ……”.

16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.

17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.

Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146

டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:


டாக்டர் ஜாகிர் நாயக்கின் விளக்கத்துக்கு ஈசா குரான் இணையம் விளக்கம்
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1
“The Word was God”

டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு இஸ்லாமிய அறிஞர் ஆவார். உலகமனைத்திலும் சென்று பல இஸ்லாமிய சொற்பொழிவுகள் தருகிறார். மாற்று மத அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென்று உள்ள பானியில் பதில் தருகிறார்.

[ சில வாரங்களுக்கு முன்பு ஒரு முறை நான் தொலைக்காட்சியில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். அதில் ஒரு கிறிஸ்தவர் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் தருகிறார்.

அந்த கிறிஸ்தவர் கேட்ட கேள்வி: புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷம் 1:1-12 , வசனங்கள் இயேசு "இறைவன்" என்பதை காட்டுகிறது", இதைப் பற்றி உம் கருத்து என்ன? என்று டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் கேட்டார். அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கொடுத்தார்கள். பதில் கொடுக்கும் போது கிரேக்க மொழியில் உள்ள மூல வார்த்தைகளைப் பற்றி விவரித்தார்கள். டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் செய்திகள் அல்லது புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேஷ கிரேக்க வார்த்தைகள் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகத்தில் இணையத்தில் தேடினேன், பதில் கிடைத்தது படியுங்கள்]

அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில் கீழே உள்ளது.

Quote:
The New testament is written in Greek. The first time God occurs in the quotation is “Hotheos” which literally means “the God ” i.e. “And the Word was with God”. But the second time when the word “God” appears in the quotation, the Greek word used is “Tontheos“, which means ” a god” i.e. “and the word was with god.” In Hebrew there is nothing like Capital ‘G’ and small ‘g’ like in the English language. Thus Hotheos is ‘the God’ with capital ‘G’ and Tontheos is ‘a god’ with small ‘g’.

(Source: http://www.irf.net/irf/dtp/dawah_tech/t22/pg1.htm and http://www.answering-islam.org/Responses/Naik/misquotations.htm )

அவர் சொல்வதின் சுருக்கம் இது தான்:

யோவான் 1:1 ல் தேவன் – God என்ற வார்த்தை இரண்டுமுறை வருகிறது. முதல் முறை “தேவன்” என்ற வார்த்தை வரும் போது, அதன் கிரேக்க வார்த்தை ” Hotheos ” என்பதாகும். இதன் பொருள் “the God” என்பதாகும். (i.e. And the Word was with God)

இதே வசனத்தில் இரண்டாவது முறை தேவன் – God என்று வருகிறது, அதன் கிரேக்க வார்த்தை “Tontheos” என்பதாகும். இதன் பொருள் “a god” என்பதாகும். ( i.e. “and the word was with god.”)

இவர் கருத்துப் படி :

Hotheos என்றால் “the God” என்று பொருள் : Capital “G”
Tontheos என்றால் “a god” என்று பொருள் : Small “g”

இதனால், அவர் முடிவு செய்கிறார், “வார்த்தயாகிய” இயேசு தேவன் (The God) இல்லை. அவர் a god ஆவார். அதாவது இயேசு தேவனுக்கு ஈடாகமாட்டார். அவர் இறைவன் இல்லை.

இப்போது டாக்டர் நாயக் அவர்களின் வாதங்களில் உள்ள உண்மையை பார்க்கலாம்: உண்மையில் அவர் சொல்கிறபடி அந்த இரண்டு வார்த்தைகளும் அவர் சொல்வது போல வருவதில்லை. மட்டுமல்ல ஒரு புதிய வார்த்தையை Ton Theos (இல்லாத வார்த்தையை) கண்டுபிடித்துள்ளார்

1. கிரேக்க மொழியில் வசனம் யோவான் 1:1:

Source : http://www-users.cs.york.ac.uk/~fisher/cgi-bin/gnt?id=0401 and http://www.answering-islam.org/Green/deedat/john1.gif

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :


Quote:

The first time God occurs in the quotation is “Hotheos” which literally means “the God” i.e. “And the Word was with God”.

ஈஸா குர்-ஆன் மறுப்பு:

டாக்டர் நாயக் அவர்கள் சொல்வது போல, யோவான் 1:1ல் முதல் முதலில் “God” என்பதின் கிரேக்க வார்த்தை “Hotheos” இல்லை, அது “TON THEON” என்பதாகும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

God என்ற வார்த்தை முதல் முறை இடம் பெறுவது:

Source : http://www.answering-islam.org/Green/deedat/john2.gif

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :


Quote:

But the second time when the word “God” appears in the quotation, the Greek word used is “Tontheos”, which means “a god” i.e. “and the word was with god.”

ஈஸா குர்-ஆன் மறுப்பு:

இரண்டாம் முறை “Tontheos” என்ற வார்த்தை வருகிறது என்றுச் சொல்கிறார். ஆனால், உண்மையில் இரண்டாம் முறை வரும் வார்த்தை “THEOS” என்பதாகும். டாக்டர் நாயக் சொன்னது மறுபடியும் தவறு.

God என்ற வார்த்தை இரண்டாம் முறை இடம் பெறுவது:

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :


Quote:

In Hebrew there is nothing like Capital ‘G’ and small ‘g’ like in the English language.

ஈஸா குர்-ஆன் மறுப்பு:

புதிய ஏற்பாடு கிரேக்கத்தில் எழுதப்பட்டது என்று முதலில் சொல்லிவிட்டு, கடைசியில் “எபிரேய” மொழியில் Capital “G” மற்றும் Small “g” இல்லை என்றுச் சொல்கிறார்.

யோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் எழுதப்படவில்லை. இது தெரிந்திருந்தும் ஏன் இவர் இப்படி சொல்கிறார்? கேட்பவர்கள் குழம்பவேண்டும் என்பதற்காகவா? மேற்கொண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்பதற்காகவா? கிரேக்க மொழியைப் பற்றிப் பேசும் போது, எபிரேய மொழி எங்கேயிருந்து வந்தது?

“Ton theos” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் தவறான இலக்கணமாகும்:

கிரேக்க மொழியில் Theon மற்றும் Theos என்ற வார்த்தைகள் இரண்டும் “தேவன்” என்பதையே குறிக்கும். கிரேக்க வார்த்தை “Ton” என்பதின் பொருள் ஆங்கிலத்தில் “the” என்பதாகும்.

“Theon” என்ற வார்த்தைக்கு முன் “Ton” என்ற வார்த்தை வரலாமே ஒழிய, “Theos” என்ற வார்த்தைக்கு முன்பாக வரக்கூடாது.

1) In ‘ton theos’ he mixes ‘ton’ (the accusative case of the article) with ‘theos’ (the nominative of the noun) which is an impossible construction in Greek.
Source: answering-islam.org : http://answering-islam.org.uk/Responses/Deedat/greek.html

உலகமகா இஸ்லாமிய பேச்சாளர் “டாக்டர் நாயக் அவர்கள்” :

உலக இஸ்லாமியர்களுக்கு “ஒரு மாதிரி – Role Model” ஜாகிர் நாயக் ஆவார். அப்படிப்பட்டவர் மேடைகளில் பேசுவதற்கு முன்பாக, எழுதுவதற்கு முன்பாக தான் என்ன சொல்லப்போகிறோம், அதன் பொருள் என்ன? என்பதை முன்கூட்டியே கற்றுக்கொண்டு தானே பேசவேண்டும்?


1) இவர் கிரேக்க புதிய ஏற்பாடு யோவான் சுவிசேஷத்தைப் பார்த்தாரா? இல்லையா?

2) தனக்கு கிரேக்க மொழிப் பற்றி தெரியவில்லையானால், தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது அதைப் பற்றியுள்ள புத்தகங்களை படிக்கலாம்? அதை விட்டுவிட்டு இல்லாத வார்த்தைகளை இருப்பதாகச் சொல்வது ஒரு அறிஞருக்கு தகாது?

3) பைபிளின் ஒரு வசனத்தை சொல்வதற்கு முன்பாக, அந்த வசனத்தை ஒரு முறை ஒரே ஒரு முறை கிரேக்க மொழியில் கண்களால் பார்த்து இருக்கலாம்? அதையும் செய்யவில்லை, நம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.

4) அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், எவ்வளவு நாள் வண்டி ஓடுகிறதோ ஓடட்டும், என்று வேண்டுமென்றே இப்படி வசனங்களை மாற்றிச் சொல்கிறாரா இவர்? ஆமாம், இது தான் சரியான காரணமாக இருக்கும். இப்படிப் பட்ட மேதாவிக்கு இது தெரியாமல் இருக்காது.


இவர் எங்கேயிருந்து எடுத்து இதைச் சொல்கிறார்: அஹமத் தீதத் தான் இதற்கு மூலம்

அஹமத் தீதத் என்பவரும் டாக்டர் நாயக் போன்று ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். டாக்டர் நாயக் அவர்களின் பெரும்பான்மையான கருத்துக்கள், அஹமத் தீதத் அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இப்போது அவர் இல்லை, அவர் காலமாகிவிட்டார்.

அஹமத் தீதத் எழுதிய “The Choice” மற்றும் “Christ In Islam” என்ற புத்தகத்திலும், அவர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.

அவர் ஒரு கிறிஸ்தவ போதகரிடம் உரையாடடியதாக எழுதுகிறார்:


Quote:

I asked the Reverend whether he knew Greek? “Yes”, he said, He had studied Greek for five years before qualifications. I asked him what the Greek word was for “God” the first time it occurs in the translation – “and the Word was with God”? He kept staring, but did not answer. So I said, the word was HOTHEOS, which literally means “THE GOD” … which in turn is rendered – God. “Now tell me, what is the Greek word for God in the second occurrence in your quotation – “and the Word was God”? The Reverend still kept silent … the game was up. I said the word was TONTHEOS, which means a god. (Ahmed Deedat, The Choice, Brunswick, Australia: Islamic Service House, p. 192; also published in, Christ in Islam, Durban, RSA: IPCI, 1993, p. 40)

Source: answering-islam.org http://www.answering-islam.org/Green/deedat.htm and http://www.jamaat.net/cis/ChristInIslam.html

மொத்தத்தில் இருவரும் ( திரு அஹமத் தீதத் மற்றும் டாக்டர் நாயக்) இப்படி தவறான செய்தியை பரப்பிக்கொண்டு (வந்தார்கள்)வருகிறார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் தொலைக்காட்சியில் பார்த்தபோது, டாக்டர் நாயக் அவர்கள் இந்த பதிலை அளித்துவிட்டபிறகு, கேள்வி கேட்ட கிறிஸ்தவர் மறுபடியும் எழுந்து, நீங்கள் வசனம் 1க்கு மட்டும் தான் பதில் அளித்தீர்கள், நான் கேட்டது முதல் 12 வசனங்கள் வரை, அதற்கு பதில் அளியுங்கள் என்றுக் கேட்டார்.

உடனே, டாக்டர் நாயக் அவர்கள் அந்த கிறிஸ்தவரிடம் கேட்டார்கள்:

முதலில் நான் சொன்ன விவரங்கள் படி கிரேக்க மொழியில், யோவான் 1:1ல் முதலில் வரும் “தேவன்” என்ற வார்த்தை “Hotheos” தானே என்று கேட்டார். கேள்வி கேட்ட கிறிஸ்தவர் சிறிதும் யோசிக்காமல், “ஆமாம்” என்றபடி தலையாட்டினார்.

இரண்டாம் முறை “தேவன்” என்ற வார்த்தை “Tontheos” தானே என்று கேட்டார். மறுபடியும் “ஆமாம்” என்று ஒப்புக்கொண்டார், அந்த கிறிஸ்தவர்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.

ஒரு நபர் (டாக் நாயக் அவர்கள்) ஒரு மேடையில் ஆதாரம் இல்லாமல், கிரேக்க மொழியில் பைபிளில் முதலில் ஒரு வார்த்தை இப்படி வருகிறது, இரண்டாவது இப்படி வருகிறது என்றுச் சொன்னால்? அதை சரி பார்க்காமல், அவர் சொல்வது சரியா தவறா என்று சோதித்தறியாமல் எப்படி இந்த கிறிஸ்தவர் “ஆமாம்” என்று ஒப்புக்கொண்டார் என்பதே? தமிழ் அல்லது ஆங்கில பைபிளிலிருந்து சொன்னால், உடனே சரி பார்க்க முடியும்.

அதாவது,

1. ஆமாம் என்று ஒப்புக்கொண்ட நபருக்கு கிரேக்க மொழி, முக்கியமாக யோவான் வசனம் 1:1ஐப் பற்றி தெரியாமல் இருக்கவேண்டும்? அல்லது.

2. தனக்கு தெரியாவிட்டாலும், “டாக்டர் ஜாகிர் நாயக்” அவர்கள் “தவறாகச் சொல்வார்களா நிச்சயமாகச் சொல்லமாட்டார்கள்” என்ற நம்பிக்கையா?

கிறிஸ்தவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது? மேடையில் ஒரு வாதம் நடக்குமானால், அதில் சொல்லப்படும் விவரங்களை சரிபார்க்க நேரம் இருக்காது, அது சில நேரங்களில் முடியாது கூட.

இப்படிப் பட்ட நேரங்களில் என்ன செய்யவேண்டும்?

1. முதலாவது ஆதாரம் என்ன என்றுக் கேட்கவேண்டும்?

2. எனக்கு கிரேக்க மொழி தெரியாது, முக்கியமாக யோவான் 1:1ல் முதலாவது என்ன வருகிறது, இரண்டாவது என்ன வருகிறது என்று தெரியாது, நான் சரி பார்க்கும் வரை, நீங்கள் சொல்வது சரியானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ஆதாரம் இருந்தால், கிரேக்க புதிய ஏற்பாடு உம்மிடம் இருந்தால், காட்டுங்கள் அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்றுச் சொல்லவேண்டும்.

அதை விட்டுவிட்டு, நமக்கு தெரியாத விஷயத்தில், அவர் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ள சபையில் பொய்யுக்கு துணைபோவது, நமக்கு தகாது.

புறாக்களைப் போல கபடற்றவர்களாக இருங்கள், சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள்.

முடிவுரை: சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய். அது யாராக இருந்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, என்னையும் சேர்த்து.

இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட விவாதத்தின் வீடியோ கிளிப் http://www.youtube.com/ என்ற தளத்தில் இருக்கலாம், அதை யாராவது கண்டால், இங்கு அதன் தொடுப்பை கொடுக்கும்படி வேண்டுகிறேன். நானும் முயற்சி செய்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு:

[1] டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[2] Misquotations and Misinformation propagated by Zakir Naik

[3] அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[4] அஹமத் தீதத்தும் கிரேக்க மொழியும்
[5] Another Choice: The Teaching of Ahmed Deedat – By Samuel Green
[6] Rebuttals to Muslim Polemics against Christianity [7] புதிய ஏற்பாடு,கிரேக்க மொழியில் படிக்க
[8] கிரேக்க புதிய ஏற்பாட்டில் தேடுவதற்கு

Source : http://www.geocities.com/isa_koran//tamilpages/Rebuttals/zakirnaik/NaikandJohn11.htm